×

திருச்செந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

திருசெந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. தூத்துக்குடி மலை வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பிற்பகல் 3 மணி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படுவதால் மக்கள் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்திருந்தது. கடந்த மாதம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் நிலையங்கள் மழைநீரால் சூழப்பட்டன. மேலும், ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. திருச்செந்தூர் – நெல்லை இடையிலான ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் – நெல்லைக்கு இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முழுவதும் சேதமடைந்த காரணத்தால் திருச்செந்தூர் – நெல்லை போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே சீரமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. அதன்படி இன்று 11 மணிக்கு நெல்லையில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே முற்பகல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தண்டவாளத்தை மக்கள் கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் திருசெந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. தூத்துக்குடி மலை வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பிற்பகல் 3 மணி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படுவதால் மக்கள் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tricendur ,Rice ,Trisentur ,Paddy ,Toothukudi Mountain ,Flood ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கடலில் அதிகப்படியான...